புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உடையார்கட்டு, வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் ஈடுபட்டனர்.
இதன்போது உடையார்கட்டு பகுதியில் திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பலசரக்கு விற்பனை நிலையமும், சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகமும் பொது சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கிக்கொண்டன.
இதனையடுத்து இரு வர்த்தக நிலைய உரிமையாளர்களிற்கும் எதிராக பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் இனால் மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று( 20) வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குகளை இன்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம் உரிமையாளர்களை குற்றவாளிகளாக இனங்கண்டு 40,000/= தண்டம் அறவிட்டதுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கியது.