உலக கிரிக்கெட் அரங்கில் முக்கிய அணிகளில் ஒன்றாகத் தொடர்ந்து கருதப்பட்டு வந்தாலும், ஐ.சி.சி. தொடர்களில் இறுதிபோட்டிகளில் வெற்றியை அடைய முடியாமல் தொடர்ந்து ஏமாற்றங்களை சந்தித்தது தென்ஆப்பிரிக்கா.
பல வருடங்களுக்குப் பிறகு, தென்ஆப்பிரிக்கா தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் கொடுக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2025 ஆம் ஆண்டின் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
இப்போட்டி கடந்த ஜூன் 11 ஆம் திகதி லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. நாணயச் சுழட்சியில் வென்று பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்த தென்ஆப்பிரிக்கா, முதலிலேயே ஆஸ்திரேலியாவை 212 ஓட்டங்களுக்கு முடக்கிக்கொண்டது. இதில் ரபாடா 5 விக்கெட்டும், யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் எதிர்பாராதவிதமாக 138 ஓட்டங்களுக்குளேயே சுருண்டனர். ஆஸ்திரேலியா 74 ஓட்டங்கள் முன்னிலையைப் பெற்றது. இதில் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை ஆட ஆரம்பித்த ஆஸ்திரேலியா அணி மிக மோசமான தொடக்கத்தை பெற்றது. முதல் 75 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டார்க் மற்றும் அலெக்ஸ் கேரி இணைப்பாட்டத்தில் 61 ஓட்டங்களை குவித்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா 207 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. ஸ்டார்க் 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வெற்றி இலக்காக 282 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், அய்டன் மார்கிரம் பொறுப்புடன் விளையாடி சதமடித்தார் மேலும் கேப்டன் பவுமா அரைசதம் அடித்து முக்கிய பங்களிப்பை அணிக்காக வழங்கினார். இருவரும் சேர்ந்து இணைப்பாட்டமாக 143 ஓட்டங்களை குவித்தனர்.
மூன்றாம் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 213/2 என்ற நிலைமையில் இருந்தது. நான்காம் நாள் பவுமா 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மார்கிரம் 136 ரன்னுடன் அரங்கத்தை விட்டு வெளியேறியபோதும், வெற்றி 6 ஓட்டங்கள் தூரத்தில் இருந்தது. கடைசியில் டேவிட் பெடிங்காம் மற்றும் வெர்ரைன் ஜோடி இணைந்து அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்தனர்.
83.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்த தென்ஆப்பிரிக்கா, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியால், பல வருடங்களாகக் காத்திருந்த கனவு நனவாகியுள்ளது. டெம்பா பவுமாவின் தலைமைத்துவத்தில், தென்ஆப்பிரிக்கா 2025க்கான உலக டெஸ்ட் சாம்பியனாக தடம்பதித்துள்ளது.
அன்பான நேயர்களே!🙏 உலகெங்கும் நடக்கும் விடயங்களை உண்மையான செய்திகளாக உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்களின் யாழரசன் சமூக வலைத்தளங்களூடாக இணைந்திருங்கள். 💥💥💥
வானொலியைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும்👇
👉 www.yalarasan.lk
👉வலையொளித் தளம் 👇
👉முகநூல்👇
👉புலனம் 👇
🤜 உங்களுடன் வாரத்தின் ஏழு நாட்களும், இருபத்து நான்கு மணி வேளைகளும் யாழரசன் இணைந்திருப்பான் 🤛
👉விளம்பரத் தொடர்புகளுக்கு :-👇
📲https://wa.me/94750944964