தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் திகதி நடைபெறுகிறவுள்ள நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வைகோ, சண்முகம், வில்சன், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.
இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் இன்று ( 28) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி மக்கள் நீதி மையத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.
அன்பான நேயர்களே!🙏 உலகெங்கும் நடக்கும் விடயங்களை உண்மையான செய்திகளாக உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்களின் யாழரசன் சமூக வலைத்தளங்களூடாக இணைந்திருங்கள். 💥💥💥
வானொலியைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும்👇
👉 www.yalarasan.lk
👉புலனம் 👇
👉விளம்பரத் தொடர்புகளுக்கு :-👇
📲0750944964