குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கம்பீரா பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததையடுத்து பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் விழுந்ததையடுத்து பாலத்தின் மேல் பயணித்துக்கொண்டிருந்த இரு லொறிகள் , இரு வேன்கள் உட்பட 6 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன.

விபத்தில் முதல்கட்டமாக 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பாலமானது 43 ஆண்டுகள் பழமையானதோடு கடந்தாண்டு தான் பழுது பார்க்கப்பட்டது. 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

அன்பான நேயர்களே!🙏 உலகெங்கும் நடக்கும் விடயங்களை உண்மையான செய்திகளாக உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்களின் யாழரசன் சமூக வலைத்தளங்களூடாக இணைந்திருங்கள். 💥💥💥

வானொலியைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும்👇

👉 www.yalarasan.lk

👉வலையொளித் தளம் 👇

https://youtube.com/@yalarasan90?si=IAwhe2yvm7t4jOup

👉முகநூல்👇

https://www.facebook.com/profile.php?id=100080307731535&mibextid=kFxxJD

👉புலனம் 👇

https://chat.whatsapp.com/EcCk7J1qqr88llPmQgPgY4

🤜 உங்களுடன் வாரத்தின் ஏழு நாட்களும், இருபத்து நான்கு மணி வேளைகளும் யாழரசன் இணைந்திருப்பான் 🤛

👉விளம்பரத் தொடர்புகளுக்கு :-👇

               📲https://wa.me/94750944964

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top