யாழ்ப்பாணம் ,தாவடி வீதியிலுள்ள சர்வசன அதிகாரம் கட்சியின் அலுவலகத்துக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அருண் கூறியிருப்பதாவது,
238, K.K.S. வீதி, தாவடி, யாழ்ப்பாணம் என்ற விலாசத்தில் அமைந்துள்ள எனது வீடும் அலுவலகமும் உள்ள கட்டிடத்திற்கு, இனந்தெரியாத நபர்களால் திட்டமிட்ட வகையில் தீ வைக்கப்பட்டுள்ளதை, ஜனநாயகத்தை மதிக்கும் இந்நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தீவைப்பு சம்பவம் நேற்று இரவு (13/01/2026) சுமார் 11:40 முதல் 11:50 மணிக்குள் இடம்பெற்றுள்ளது.
என்னை மௌனமாக்கும் நோக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொலை மிரட்டல் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதலை நான் கருதுகிறேன். இது தனிப்பட்ட சம்பவமல்ல; கருத்துச் சுதந்திரத்திற்கெதிரான நேரடி தாக்குதல் ஆகும்.
நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது போல, ஆயுதங்களுக்கும், வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் அடிபணியும் கோழை நான் அல்ல. அச்சுறுத்தல்களாலும், கொலை முயற்சிகளாலும் எனது குரலை அடக்க முடியாது.
எனது கருத்தே நான். எனது கருத்துச் சுதந்திரம் என் உயிரைவிடப் பெறுமதியானது.
எனது கருத்துச் சுதந்திரத்திற்காக மட்டுமல்ல; இந்த நாட்டின் கடைசி குடிமகனின் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக நான் என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்.
இந்த தாக்குதலின் மூலம் என்னை மௌனமாக்க முடியும் என எண்ணும் சகல வன்முறையாளர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும், அது ஒருபோதும் சாத்தியமில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவம் குறித்து உடனடி, நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டியது தொடர்புடைய அதிகாரிகளின் கடமை என்பதையும் இவ்வேளையில் வலியுறுத்துகிறேன்.- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்பான நேயர்களே!🙏 உலகெங்கும் நடக்கும் விடயங்களை உண்மையான செய்திகளாக உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்களின் யாழரசன் சமூக வலைத்தளங்களூடாக இணைந்திருங்கள். 💥💥💥
வானொலியைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும்👇
👉 www.yalarasan.lk
👉வலையொளித் தளம் 👇
👉முகநூல்👇
👉புலனம் 👇
🤜 உங்களுடன் வாரத்தின் ஏழு நாட்களும், இருபத்து நான்கு மணி வேளைகளும் யாழரசன் இணைந்திருப்பான் 🤛
👉விளம்பரத் தொடர்புகளுக்கு :-👇
📲https://wa.me/94750944964