தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தவர் நடிகர் ராஜேஷ். இவர் நடிப்பில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் பல சின்னத்திரை தொடர்களும் வெளியாகியிருக்கின்றன
அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், ’கன்னிப் பருவத்திலே’ படம் மூலம் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். நடிகர் விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிப்பைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்டவரான இவர், அத்துறையிலும் கவனம் பெற்றவராகவே இருந்தார்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜேஷ் இன்று காலை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததார்.
75-வயதான ராஜேஷ் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அன்பான நேயர்களே!🙏 உலகெங்கும் நடக்கும் விடயங்களை உண்மையான செய்திகளாக உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்களின் யாழரசன் சமூக வலைத்தளங்களூடாக இணைந்திருங்கள். 💥💥💥
வானொலியைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும்👇
👉 www.yalarasan.lk
👉புலனம் 👇
👉விளம்பரத் தொடர்புகளுக்கு :-👇
📲0750944964