ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால், 23 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கனமழையினால் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (30) பெய்த கனமழையால், பியாஸ் நதி நிரம்பி வழிவதன் காரணமாக, கர்சோக் , பண்டோஹ் , துனாக் மற்றும் தரம்பூர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.