எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ் டெங்கு ஒழிப்பு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகரும், சமூக வைத்திய நிபுணருமான பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர “நாடு முழுவதும் இதுவரை 26,000இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை ஒரு குழந்தை மரணம் பதிவாகியுள்ளது, மேலும் 45 வீதமான நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சமூக வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
இதேவேளை, நாடு முழுவதும் 26,775 டெங்கு நோயாளர்கள் மற்றும் 14 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. மேல், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்பான நேயர்களே!🙏 உலகெங்கும் நடக்கும் விடயங்களை உண்மையான செய்திகளாக உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்களின் யாழரசன் சமூக வலைத்தளங்களூடாக இணைந்திருங்கள். 💥💥💥
வானொலியைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும்👇
👉 www.yalarasan.lk
👉வலையொளித் தளம் 👇
👉முகநூல்👇
👉புலனம் 👇
🤜 உங்களுடன் வாரத்தின் ஏழு நாட்களும், இருபத்து நான்கு மணி வேளைகளும் யாழரசன் இணைந்திருப்பான் 🤛
👉விளம்பரத் தொடர்புகளுக்கு :-👇
📲https://wa.me/94750944964