7ஆவது முறையாக நோர்வே செஸ் சம்பியன் பட்டத்தை வென்ற மாக்னஸ் கார்ல்சன்

7ஆவது முறையாக நோர்வே செஸ் சம்பியன் பட்டத்தை வென்ற மாக்னஸ் கார்ல்சன்

உலகின் முதல்நிலை வீரரான மாக்னஸ் கார்ல்சன் 7ஆவது முறையாக நோர்வே செஸ் சம்பியன் பட்டத்தை வென்றார்.

நோர்வேயில் இன்று நடைபெற்ற கடைசி சுற்றுப் போட்டியில் மாக்னஸ் கார்ல்சன் அர்ஜூன் எரிகைசியுடன் விளையாடினார்.

இந்தப் போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய கார்ல்சன் தொடர்ச்சியாக 53ஆவது நகர்த்தலில் இருந்து செக் வைத்தார். அர்ஜூன் எரிகைசிக்கு வேறு வழியில்லாமல் அவரது 56ஆவது நகர்த்தலில் போட்டி சமநிலையில் முடிந்தது.

குகேஷ் முன்னாள் சாம்பியன் கரானாவுடன் தோல்வியுற்றதால் கார்ல்சன் சம்பியனாக மாறினார்.

பெண்கள் பிரிவில் உக்ரைனின் அனா முஸிஷுக் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவர் ஓபன் பிரிவில் கடைசி சுற்றுக்குப் பிறகு புள்ளிப் பட்டியல்

  1. மாக்னஸ் கார்ல்சன் – 16 புள்ளிகள்
  2. ஃபபியானோ கரானா – 15.5 புள்ளிகள்
  3. டி. குகேஷ் – 14.5 புள்ளிகள்
  4. ஹிகரு நகமுரா – 14 புள்ளிகள்
  5. அர்ஜுன் எரிகைசி – 13 புள்ளிகள்
  6. வெய் யி – 9.5 புள்ளிகள்

அன்பான நேயர்களே!🙏 உலகெங்கும் நடக்கும் விடயங்களை உண்மையான செய்திகளாக உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்களின் யாழரசன் சமூக வலைத்தளங்களூடாக இணைந்திருங்கள். 💥💥💥

வானொலியைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும்👇

👉 www.yalarasan.lk

👉வலையொளித் தளம் 👇

https://youtube.com/@yalarasan90?si=IAwhe2yvm7t4jOup

👉முகநூல்👇

https://www.facebook.com/profile.php?id=100080307731535&mibextid=kFxxJD

👉புலனம் 👇

https://chat.whatsapp.com/EcCk7J1qqr88llPmQgPgY4

🤜 உங்களுடன் வாரத்தின் ஏழு நாட்களும், இருபத்து நான்கு மணி வேளைகளும் யாழரசன் இணைந்திருப்பான் 🤛

👉விளம்பரத் தொடர்புகளுக்கு :-👇

               📲https://wa.me/94750944964

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top